பங்களாதேஷிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்தியா! சுப்மன் கில் சதம் வீண்!

சனி, 16 செப்டம்பர் 2023 (06:54 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில் நேற்று சூப்பர் 4 கடைசி போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.  இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் அடித்து, இந்தியாவுக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் கேப்டன் 80 ரன்களும், டோவிட் ஹ்ருதோய் 54 ரன்களும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்கள் விழுந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் நிலைத்து நின்று சதமடித்தார்.

அவர் களத்தில் இருக்கும் வரை இந்திய அணியின் வெற்றி எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருந்தது. ஆனால் அவர் அவுட் ஆனதும் அந்த நம்பிக்கை தகர்ந்தது. 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்