வினோத் காம்ப்ளிக்கு உதவி செய்யும் சுனில் கவாஸ்கர்!

vinoth

புதன், 16 ஏப்ரல் 2025 (07:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி இந்திய அணிக்காக 104 ஒரு நாள் போட்டி மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மிகச்சிறப்பாக தனது வாழ்க்கையைத் தொடங்கியும் அவரால் அதை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியவில்லை. வினோத் காம்ப்ளியும் சச்சின் டெண்டுல்கரும் பள்ளி கால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் கிரிக்கெட் வாழ்க்கை எதிர்பார்த்ததைப் போல செல்லாததால் காம்ப்ளி குடிப் பழக்கத்துக்கு அடிமையானார். இதன் காரணமாக அவர் தன்னுடைய வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். அவரின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சரியாக நடக்கக் கூட முடியாமல் அவர் கஷ்டப்பட்டது ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ அளிக்கும் ஓய்வூதியம் மட்டுமே அவரின் ஒரே வருமானமாக இருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக மாதா மாதம் வினோத் காம்ப்ளிக்கு 30000 ரூபாய் நிதியுதவி செய்ய முன் வந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்