இலங்கையின் பெருமை வாய்ந்த கலே கிரிக்கெட் மைதான கேலரிகள் இடிக்கப்பட உள்ளதாகவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இனி நடக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலே மைதானத்தில் 1998ஆம் ஆண்டிலிருந்து பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்துள்ளது. முரளிதரன் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தது இந்த மைதானத்தில்தான். பல்வேறு பெருமைகள் உட்பட பல சாதனைகளை கண்டுள்ளது கலே கிரிக்கெட் மைதானம்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போடியில் இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது இந்த கலே மைதானத்தில்தான்.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் இந்த மைதானம் சேதமடைந்தது. பின்னர் மைதானத்தின் கேலரிகளை சீரமைக்கப்பட்டது. இந்த மைதானத்திற்கு பின்புறம் போர்ச்சுகீசியர்களால் 1505ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோட்டை யுனெஸ்கோ பாரம்பரி சின்னமாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில் இந்த கோட்டையை மறைக்கும் வகையில் மைதானத்தில் கேலரிகள் கட்டபப்ட்டுள்ளதாக புகார் எழுந்தது. கோட்டையை மறைக்கும் விதமாக கட்டப்பட்டுள்ள கேலரிகளை இடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் என்ற அங்கிகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கலே மைதானம் வரும் நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பின்னர் மைதானத்தில் உள்ள கேலரிகளை இடிக்கப்பட உள்ளது.
மேலும் இங்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகள் நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.