பிலாண்டர் வேகத்தில் சுருண்டது ஆஸ்திரேலியா: தொடரை வென்றது தென்ஆப்பிரிக்கா

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (15:18 IST)
அஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் கடந்த வாரம் சனிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 488 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக மார்க்கம் 152 ரன்களும், பவுமா 95 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்கள் எடுத்து ஆல்-ஆவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பெயின் 62 ரன்கள் எடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 267 ரன்கள் முன்னிலையோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அதிகப்பட்சமாக பிளிசிஸ் 120 ரன்கள் எடுத்தார்.
 
இதனையடுத்து, 612 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா பவுலர்கள் சீட்டு கட்டுகளை போல சரித்தனர். அதனால் அந்த அணி 119 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சாமாக பிலாண்டர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா அணி 4 டெஸ்ட் கொண்ட போட்டி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்