இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போகப்போவது இவர்தானாம்… ஆகாஷ் சோப்ரா கருத்து!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (15:11 IST)
ஐபிஎல் தொடருக்கான 2022 ஆம் ஆண்டு ஏலம் பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து அனைத்து அணிகளுக்குமான ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மார்ச் கடைசி வாரத்தில் தொடங்கி மே இறுதி வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் ஏலம் நடக்க உள்ளது. இதில் சுமார் 590 கோடி ரூபாய்க்கு வீரர்கள் ஏலத்தில் அறிவிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்குதான் நல்ல டிமாண்ட் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா ‘ஸ்ரேயாஸ் ஐயருக்கு 20 கோடி ரூபாய் வரை கூட கொடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தயாராக உள்ளதாக சிலர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்