இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு, இந்தியாவில் எப்படி ரசிகர்கள் அதிகமோ, அதுபோலவே பாகிஸ்தானிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட கோலியின் ரசிகர்களாக உள்ளன. அதில் மிக முக்கியமானவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அவர் இப்போது கோலி பற்றி பேசும்போது “உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேன் சச்சின்தான் என நம்பி வந்தேன். ஆனால் அவரால் கேப்டனாக எதையும் சாதிக்க முடியவில்லை. கோலி, சமீபத்தைய தடுமாற்றத்துக்குப் பிறகு மனதை வலுவாக்கி, மீண்டும் கிரிக்கெட்டில் ஆட்சி செய்து வருகிறார். என்னிடம் நண்பர்கள் சிலர் நீங்கள் கோலியை அதிகமாக புகழ்கிறீர்கள் எனக் கூறுகின்றனர். அவரை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் என்பதைதான் நான் அவர்களிடம் திரும்பிக் கேட்கிறேன்” எனக் கூறியுள்ளார்.