சிங்கங்களுடன் செல்ஃபி: ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (13:10 IST)
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரத்தில், வனபாதுகாப்பு அதிகாரி சிங் ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஜூன் மாதம் தனது மனைவி ரீவாவுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சிங்கங்கள் சரணாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் சிங்கங்களுடன் செல்ஃபி எடுத்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
 
இந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஜடேஜா எப்படி சிங்கங்களின் அருகில் சென்று படம் எடுத்துக் கொண்டார் என்ற சர்ச்சையும் கிளம்பியது.
 
இதற்காக வனத்துறை பாதுகாப்பு அதிகாரி ஏ.வி.சிங் ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். ஜடேஜாவின் மாமனார் நேற்று வனத்துறை பாதுகாப்பு அதிகாரியை சந்தித்து அபராத தொகையை செலுத்தினார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்