நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது .
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஆவது இலக்கை எட்டி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்த தோல்வி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ந்து நான்காவது தோல்வியாகும். முதல் 9 போட்டிகளில் 8 போட்டிகளை வென்ற ராஜஸ்தான் அடுத்த நான்கு போட்டிகளில் நான்கையும் தோற்றுள்ளது.
இதுபற்றி வருத்தப்பட்டு பேசியுள்ள ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் “இந்த ஆடுகளத்தில் 160 ரன்களாவது சேர்த்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் 140 ரன்கள் சேர்த்தோம். அதுதான் நாங்கள் செய்த தவறு. வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாம் தொடர்ந்து தோற்று வருகிறோம் என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். யாராவது ஒருவர் அணிக்காக முன்வந்து தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். அனைவரும் சேர்ந்து விளையாடினால்தான் நாம் வெற்றி பெற முடியும். இது தனிநபர் விளையாட்டு இல்லை.” எனக் கூறியுள்ளார்.