பழசை மறந்து நட்பு பாராட்டிய ஜடேஜா & சஞ்சய் மஞ்சரேக்கர்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (09:07 IST)
இந்திய வீரர் ஜடேஜாவுக்கும் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருக்கும் இடையே உறவு பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் நன்காக அறிவார்கள். ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என சொல்லி கேலி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு ஜடேஜாவும் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தார். அதன் பிறகு அதில் ‘ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் நான் சொன்ன pits and pieces என்ற வார்த்தைய அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை’ எனக் கூறியுள்ளார். இதனால ஜடேஜா ரசிகர்கள் மஞ்சரேக்கரைக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு வர்ணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் ஜடேஜாவிடம் உரையாடினார். அந்த உரையாடலை தொடங்குவதற்கு முன்பாக அவர், “என்னோடு பேசுவதற்கு நீங்கள் தயாரா? “ எனக் கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே பேசிய ஜடேஜா “கண்டிப்பாக” என கூலாக பதில் சொன்னார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்போது சமூகவலைதளங்களில் ஜடேஜாவும், சஞ்சய் மஞ்சரேக்கரும் நட்புப் பாராட்டி வருகின்றனர். லெஜண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டியை தொகுத்து வழங்கி வரும் சஞ்சய் மஞ்சரேக்கரின் புகைப்படத்தைப் பகிர்ந்து “என்னுடைய நண்பரை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்” எனப் பகிர்ந்திருந்தார். இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள சஞ்சய் “விரைவில் உங்கள் நண்பர் உங்களை விரைவில் களத்தில் காண ஆர்வமாக இருக்கிறார்” எனக் கூறினார். அதற்கு ஜடேஜா “கூடியவிரைவில்” என பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்