இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அவர் தலைமையில் சி எஸ் கே அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. தற்போது 40 வயதாகும் அவர் இந்த ஆண்டு சி எஸ் கே அணியை தலைமையேற்று விளையாடுகிறார். இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான சோதி கருத்து தெரிவித்துள்ளார். அதில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டிங்கில் எதிரணியைக் கலங்கவைக்க பழைய பினிஷர் தோனி இப்போது இல்லை. அதனால் அந்த ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி முன்பே இறங்க வேண்டும். சில ஓவர்கள் செட்டில் ஆகிவிட்டு அவர் விளையாடுவதற்கு இது வசதியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.