இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் ஐபிஎல் விளையாடுவார் என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டோடு ஓய்வை அறிவித்தாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்குப் பிறகு சி எஸ்கே அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு ரவிந்தர ஜடேஜாவுக்கு அதிகமாக இருப்பதாக முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். மேலும் மொயின் அலியும் அணியை தலைமையேற்று வழிநடத்தி செல்லும் திறமை கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.