தொடக்க வீரர்கள் பொறுப்பான ஆட்டம்… ரிஷப் பண்ட் வெளியேற்றம்… முதல் நாளில் இந்தியா நிதான ஆட்டம்!

vinoth

வியாழன், 24 ஜூலை 2025 (07:54 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் ட்ரஃபோர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணிக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் 58 ரன்களும் கே எல் ராகுல் 46 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மூன்றாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய சாய் சுதர்சன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கேப்டன் கில் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

அதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தைத் தொடங்க கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து அவரது வலது கால் விரல்களில் தாக்க மேற்கொண்டு விளையாட முடியாமல் 37 ரன்களில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இந்திய அணி நேற்று ஆட்டநேர முடிவில் 264 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து ஆடி வருகிறது. தற்போது ஜடேஜா மற்றும் தாக்கூர் ஆகியோர் முறையா 19 மற்றும் 19 ரன்களோடு களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்களும் கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் டாவ்ஸன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்