“கோஹ்லிக்கு செய்யவேண்டியது இதுதான்…” ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (09:00 IST)
ரிக்கி பாண்டிங் கோஹ்லியை அவர் இடத்தை மாற்றாமல் அதிக போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக மோசமான ஃபார்மில் இருக்கிறார். இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ளன. பலரும்  விராட் கோலி தன்னுடைய உச்சத்தை கடந்துவிட்டார். அவரால் இனிமேல் மீண்டும் பழைய கோலியாக விளையாட முடியாது எனக் கூறி வருகின்றனர்.

தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் போட்டிகளிலும் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில் கோஹ்லி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அவரை அணியில் இருந்து நீக்கவேண்டுமென கருத்துகள் எழுந்துள்ளன.

கோஹ்லியின் ஃபார்ம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “கோலியை அவர் இடத்தில் இருந்து மாற்றாமல் அதிக போட்டிகளை விளையாட வைக்க வேண்டும். அதுதான் அவரை மீண்டும் ஃபார்முக்கு வரவைக்கும். நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தால் அதைதான் செய்யவைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்