அட ஆர் சி பி பவுலர்ஸா இது? குஜராத்தை ரன்களுக்கு 147 கட்டுபடுத்தி மிரட்டல்

vinoth

சனி, 4 மே 2024 (21:23 IST)
இன்று நடக்கும் 52 ஆவது லீக் போட்டியில் ஆர் சி பி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர் சி பி கேப்டன் பாஃப் டு ப்ளசீஸ் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி பேட்டிங் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன. நடுவரிசை ஆட்டக்காரர்களான ஷாருக் கான் (37),  டேவிட் மில்லர் (30),  ராகுல் தெவாட்டியா (35) ஆகியோர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இவர்கள் அவுட் ஆனதும் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வழக்கமாக 200 ரன்களுக்கு மேல் வாரி வழங்கும் ஆர் சி பி பவுலர்ஸ் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆர் சி பி தரப்பில் சிராஜ், யாஷ் தயால் மற்றும் விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்த, கேமரூன் க்ரீன் மற்றும் கர்ண் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்