எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் கூட ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடியும் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு எப்படியும் ஆர் சி பி அணி கப் அடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதற்கேற்றார் போல அடுத்த சீசனில் விளையாட கேமரூன் க்ரீன், அல்ஜாரி ஜோசப் மற்றும் யாஷ் தயால் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஆர் சி பி அணியின் பவுலிங்க் யூனிட் வலுகுறைந்ததாக உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அதை மறுத்துள்ள அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர் “எங்கள் மைதானம் ரன் குவிப்புக்கு ஏற்றது. அதனால்தான் நாங்கள் பேட்டிங்கை இன்னும் வலுப்படுத்தியுள்ளோம். க்ரீன் அணிக்குள் இருப்பதால் எங்கள் பேட்டிங் இன்னும் வலுவாகியுள்ளது. பவுலிங்கை பொறுத்தவரை எங்கள் அணியில் சிராஜ்தான் லீடர். பாட் கம்மின்ஸை எடுக்க நினைத்தோம். ஆனால் அது முடியவில்லை. அவருக்கு பதில்தான் அல்ஜாரி ஜோசப்பை எடுத்துள்ளோம். யாஷ் தயாலும் சிறந்த பந்துவீச்சாளர். அவரிடம் உள்ள சில குறைகளை சரி செய்துகொள்வோம்” எனக் கூறியுள்ளார்.