ஐபிஎல் ஏலம் பொருளாதாரரீதியாக நன்மை… ஆனால் நான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் –ஸ்டார்க்!

திங்கள், 25 டிசம்பர் 2023 (07:16 IST)
ஐபிஎல் மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்துள்ளது குறித்து பேசியு மிட்செல் ஸ்டார்க் “எனக்கே இது அதிர்ச்சியாகதான் இருந்தது. கண்டிப்பாக நான் கனவில் கூட நினைக்காதது இது. நான் இன்னமும் விரும்பப்படுகிறேன் அல்லது தேவையாக இருக்கிறேன் என நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் கொஞ்சம் அழுத்தம் இருக்கும் என்பதை மறுக்க முடியாது.” எனக் கூறியிருந்தார்.

இப்போது “ஐபிஎல் ஏலத்தொகை எனக்கு பொருளாதாரரீதியாக நன்மைதான். நான் எப்போதுமே சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்த வடிவம். அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் அதற்கு முன்னர் ஐபிஎல் விளையாடுவது எனக்கு பயனுள்ளதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்