கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (12:39 IST)
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்திய அணியில் விளையாடி வரும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


 
 
குஜராத்தை சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு ரிவா சோனங்கி உடன் கடந்த வருடம் ஏப்ரல் 17-ஆம் தேதி திருமணம் நடந்தது. தற்போது ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அவருக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
 
ஆனால் ரவீந்திர ஜடேஜா தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராஃபியில் இந்திய அணிக்காக விளையாடி வருவதால் அவரால் தற்போது உடனடியாக நாடு திரும்பி தனது குழந்தையை பார்க்க முடியாத சூழல் உள்ளது.
அடுத்த கட்டுரையில்