நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டி குறித்து பேசியுள்ள வர்ணனையாளர் ரவி சாஸ்திரி “இறுதிப் போட்டியில் இரு அணிகளுமே மைதானத்தைப் பொறுத்து பிளேயிங் லெவன் வீரர்களை மாற்றுவார்கள். இந்தியா ஆஸ்திரேலியா போட்டிக்கு வழங்கப்பட்ட ஆடுகளமே சிறந்தது. இந்த போட்டியில் யாராவது ஒரு ஆல்ரவுண்டர்தான் ஆட்டநாயகன் விருதைப் பெறுவார்.” எனக் கூறியுள்ளார்.