ராஜஸ்தான் அணி கேப்டனுக்கு ரூ,12 லட்சம் அபராதம்

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (17:52 IST)
ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் -16 வது சீசன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன்.

நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 175 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை கிங்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. ஆனால், குறித்த நேரத்தில்  பந்து வீசாமல் தாமதப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் சஞு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்