கே எல் ராகுல் ஒரு நல்ல கேப்டனாக வருவார்… டிராவிட் நம்பிக்கை!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:35 IST)
இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட நான்கு போட்டிகளையும் தோற்று மோசமாக கேப்டன்சியை தொடங்கியுள்ளார் கே எல் ராகுல்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டன் ரோஹித் ஷர்மா இல்லாததால் கே எல் ராகுலுக்கு அணியை வழிநடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் 3 போட்டிகளையும் தோற்று மோசமான சாதனையோடு கணக்கை தொடங்கியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ‘ராகுல் நன்றாகதான் விளையாடினார். முடிவுகள் எதிர்பார்த்தபடி வராததற்கு அவர் காரணமல்ல. அவர் கேப்டன்சியின் தொடக்கத்தில் இருக்கிறார். போக போக அவர் மிளிர்வார். சமீபகாலமாக நாங்கள் அதிகமாக ஒருநாள் தொடர் விளையாடவில்லை. எனவே இது ஒரு கண்திறப்பு தொடராக அமைந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்