உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ள நிலையில் ரயில் எஞ்சினை கூட விட்டு வைக்காமல் லோகோ பைலட் அறைக்குள்ளும் புகுந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளா என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பயணிகள் தினசரி வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட மக்கள் நெரிசலுக்கு ஏற்ற போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் அனைத்து பெட்டிகளிலும் மக்கள் ஏறி நெரித்துக் கொண்டு நின்ற நிலையில், இடம் கிடைக்காதவர் ஓடிச் சென்று எஞ்சினில் உள்ள ஓட்டுனர் அறைக்குள்ளும் புகுந்து கொண்டனர். இதனால் ரயில்வே அதிகாரிகள் அவர்களை வெளியேற சொல்ல, அவர்களோ இறங்காமல் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு எழுந்தது. பின்னர் ரயில்வே போலீஸாரும் வந்து அவர்களை இறக்கிவிட்ட பின்னர் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ரயிலின் லோகோ பைலட்டையே ஏற விடாமல் இடத்தை பிடித்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K
ये तो हाल है रेलवे का. यात्री ट्रेन के इंजन में घुसे जा रहे हैं. तस्वीर वाराणसी की है.
— Priya singh (@priyarajputlive) February 9, 2025
यह महाकुंभ स्पेशल ट्रेन का हाल है. यात्रियों ने इंजन में घुस पॉयलट के जगह पर क़ब्ज़ा कर लिया .फिर जैसे तैसे RPF ने इन जबरन घुसे यात्रियों को बाहर निकाला. pic.twitter.com/CD94RG77lU