அர்ஷ்தீப், ஹர்திக் அபாரம்… 5 விக்கெட்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான்!

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (14:52 IST)
சற்று முன்னர் தொடங்கிய இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் களமிறங்கிய விளையாடி வருகிறது.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச அந்த ஓவரில் ஒர் ரன் மட்டும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரை வீச வந்த இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் எல்பிடபுள்யு முறையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். பின்ன நான்காவது ஓவரில் அவர் முகமது ரிஸ்வானையும் அவுட்டாக்கினார்.

பின்னர் நிலைத்து நின்று ஆடிய பாகிஸ்தான் அணியில் இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி 51 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த ஹைதர் அலி மற்றும் சதாப் கான் ஆகியோரும் அடுத்தடுத்து அவ்ட் ஆக தற்போது 5 விக்கெட்களை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது பாகிஸ்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்