தொடர் தோல்வி எதிரொலி பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் ராஜினாமா

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (20:01 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.  இப்போட்டிகள் மொத்தம் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ரேலியா, நேபாளம், ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், இந்திய கிரிக்கெட் அணி, இதுவரை அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக வவெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது.

இந்த   நிலையில் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி அடுத்து விளையாட போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் தொடர் தோல்விக்கு பொறுபேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பில் இருந்து முன்னாள் வீரர் இன்சமாம்  உல் ஹக் ராஜினாமா செய்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்