இந்நிலையில் இப்போது அவருக்கு தமிழக அணியிலும் வாய்ப்பில்லை எனும் சூழல் உள்ளது. சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான அணியில் அவர் இடம்பெறாத நிலையில் விரைவில் நடக்க உள்ள ரஞ்சி கோப்பைக்கான அணியில் தமிழகத்துக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்குள் மீண்டும் திரும்புவது குறித்து பேசியுள்ள அவர் ஐபிஎல் பற்றி இப்போது அதிகம் யோசிக்கவில்லை. உலகக்கோப்பை தொடரும் வருவதால் மிகப்பெரிய ஆண்டாக இருக்கும். நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருவதால் பதற்றம் கொஞ்சம் இருக்கதான் செய்கிறது. மக்கள் என்னிடம் வலுவான ஆட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். மீண்டும் பழைய நடராஜனாக வர விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.