கோலிக்கு ஆப்பு வைக்க திட்டம் தீட்டும் ஹர்பஜன் சிங்

Webdunia
வெள்ளி, 20 மே 2016 (16:58 IST)
மும்பை இந்தியன்ஸ் பிளே-ஆப் சுற்றுக்குள் சென்றால், பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியை சமாளிக்க திட்டங்கள் உள்ளன என  இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.


 
 
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலியின் அதிரடி ஆட்டத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த குறுகிய தொடரில் இதுவரை நான்கு சதம் அடித்துள்ளார் கோலி.
 
ஃபேண்டசி ஸ்போர்ட் டெக்னாலஜி சார்பாக மொபைல் ஸ்போர்ட்டிங் அப்ளிகேசனை வெளியிட்டு பேசிய ஹர்பஜன் சிங், இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் கோலி ஒரு லெஜெண்ட் என புகழ்ந்தார் ஹர்பஜன்.
 
கோலியை வீழ்த்துவது எளிதல்ல, பிளே-ஆப் சுற்றுக்கு மும்பை அணி சென்றால், பெங்களூர் அணியுடன் மோத வேண்டியிருந்தால் கோஹ்லியை சமாளிக்க திட்டமிட்டுளோம் என்று கூறினார் ஹர்பஜன். மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய கிரிகெக்ட் அணிக்கு கவலை இல்லை. கோஹ்லி அணியை சரியான பாதையில் வழி நடுத்துவார் என்றார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்