ஐபிஎல் தொடர் மூலமாகக் கவனம் ஈர்த்த யுஷ்வேந்திர சஹால் அதன் பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சமீபகாலமாகவே இந்திய அணியில் சஹாலுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராக இருந்தபோதும் சஹால் ஒரு கட்டத்தில் அணிக்குள் இருந்த போட்டி காரணமாக வெளியேற்றப்பட்டார்.
அதில் கோலி பற்றி பேசும்போது “கோலி ஐபிஎல் கோப்பை வென்றபோது கண்ணீர் விட்டதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டியின் தோல்வியின் போது அவர் ஓய்வறையில் கண்ணீர் விட்டு அழுதார். அந்த போட்டியில் நான்தான் இறுதி பேட்ஸ்மேன். மேட்ச் முடிந்து வரும்போது அவர் கண்களில் நான் கண்ணீரைப் பார்த்தேன். அப்போது இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம் என நினைத்தேன்” எனக் கூறியுள்ளார்.