அந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது நபி பந்துவீச, அந்த பந்தை எதிர்கொண்ட அவரது பதினெட்டு வயது மகன் ஹசன் ஐசாகில் (18) அதை சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். கிரிக்கெட் வரலாற்றில் தந்தையின் பந்தில் மகன் சிக்ஸர் அடிக்கும் இதுபோன்ற அற்புத தருணம் நிகழ்வது அரிதிலும் அரிது.