கிசுகிசு உண்மைதானோ… பிரபல மாடலோடு ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட புகைப்படம்!

vinoth

சனி, 11 அக்டோபர் 2025 (09:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், செர்பியா நாட்டைச் சேர்ந்த நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் சில மாதங்களுக்கு முன்னர் விரிசல் எழுந்தது. ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்தனர். இப்போது நடாஷா தனது மகனோடு செர்பியாவுக்கே திரும்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா பிரபல மாடலான மஹிகா ஷர்மா என்பவரை டேட் செய்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இந்நிலையில் ஹர்திக் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிகாவுடன் இருக்கும் நெருக்கமானப் புகைப்படங்களைப் பகிர்ந்து அதை உறுதி செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்