விராட் கோஹ்லிக்கு சிலை வைத்த லண்டன்: ரசிகர்கள் ஆச்சர்யம்

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (10:42 IST)
தற்போது ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் லண்டனில் வெகு ஜோராக நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்த போட்டிகளில் இந்தியா தன் முதல் மேட்ச்சை நாளை மறுநாள் விளையாட உள்ளது.

இந்த நிலையில் லண்டனில் உள்ள மிகப்பெரும் பிரபலமான மெழுகுசிலை தயாரிப்பு மற்றும் அருங்காட்சியகம் நடத்தும் ’மடாமே துசாட்ஸ்’ என்னும் நிறுவனம் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியின் முழு உருவ மெழுகு சிலையை உருவாக்கி பார்வைக்கு வைத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த சிலையை காண ரசிகர்கள் பலர் ஆரவாரமாக திரண்டு வந்தபடி இருக்கின்றனர். இதற்கு முன்னால் ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட்டுக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கும் மட்டுமே லார்ட்ஸ் மைதானத்தில் சிலை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது விராட் கோஹ்லிக்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த சிலையால் கோஹ்லி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக மாறியிருக்கிறார்.

இதுபற்றி “மடாமே துசாட்ஸ்” தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் மேலாளர் ஸ்டீவ் டேவிஸ், “கிரிக்கெட் ஜுரம் நாளாக நாளாக மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. அற்புதமான இந்த உலகக்கோப்பையை சிறப்பிக்கும் வகையில் கோஹ்லியின் இந்த உருவ சிலை லார்ட்ஸ் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள்” என தெரிவித்தார்.

உலகில் எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் விராட் கோஹ்லிக்கு முக்கியத்துவம் கொடுத்து சிலை வைத்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்