முதலில் களம் இறங்கிய மார்ட்டின் குப்டில், கோலின் மன்றோ அணியினர் கடைசி வரை தோற்காமல் அற்புதமாக விளையாடினர். மார்ட்டின் குட்பில இறங்கிய வேகத்திற்கு இலங்கை பந்துகளை பகாசுரன் போல் அடித்து பறக்கவிட்டார். இருவரும் ஆளுக்கொரு அரைசதத்தை அடித்ததுடன் 16 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து மேட்ச்சையும் முடித்தனர்.