இந்த தொடரில் அவர் அவுட்டான ஐந்து முறையுல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளில்தான். இந்நிலையில் இதே போல ஒரு சூழலில் 2004 ஆம் ஆண்டு சச்சின் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே செல்லும் பந்தில் அவுட்டான போது சிட்னியில் நடந்த போட்டியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட அனைத்துப் பந்துகளையும் அடிக்காமல் விட்டு அந்த போட்டியில் இரட்டை சதமடித்து அசத்தினார். அதே போல கோலியும் செயல்பட வேண்டும் என தற்போது ரசிகர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.