பிசிசிஐ-யின் முடிவு வரவேற்கத்தக்கது- கபில் தேவ் ஆதரவு!

vinoth
சனி, 2 மார்ச் 2024 (14:25 IST)
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி அவர் ரஞ்சி கோப்பையில் இருந்து விலகினார். ஆனால் அவர் பொய் சொல்லி ரஞ்சி கோப்பை விளையாடாமல் ஓடி ஒளிகிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது. அதே போல இஷான் கிஷானும் ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் ஐபிஎல் பயிற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ அறிவித்த வருடாந்திர ஒப்பந்தத்தில் இருவர் பெயரும் நீக்கப்பட்டிருந்தது. இதனால் இப்போது ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கி வந்து ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார். இஷான் கிஷான் இன்னும் தன் முடிவை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டைக் காப்பதற்காக பிசிசிஐ எடுத்துள்ள இந்தமுடிவு சரியானதுதான் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ’நாட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்பதை பிசிசிஐ யின் இந்த முடிவு காட்டுகிறது. தேசிய அணிக்காக விளையாடுபவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாட முன்வரவேண்டும். பிசிசிஐயி இந்த முடிவு உள்ளூர் கிரிக்கெட்டைக் காக்கும்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்