ஆஸ்திரேலியா வந்து விளையாடும் போது இந்தியா வந்தால் என்ன?... பாகிஸ்தான் வீரர் கேள்வி!

vinoth

சனி, 31 ஆகஸ்ட் 2024 (08:08 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இன்னும் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பேசும்போது, “சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரை விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் வந்து விளையாடும் போது இந்திய அணி வந்து விளையாண்டால் என்ன? அரசியலை தள்ளிவைத்துவிட்டு இந்தியா வந்து விளையாட வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு விளையாட செல்ல வேண்டும் என்றால் எங்கள் நாட்டு அரசு அனுமதிக்கிறது. அதுபோல இந்திய அரசும், இந்திய வீரர்களை வந்து விளையாட அனுமதிக்க வேண்டும்.  இருநாட்டு அரசுகள் பேசி முடிவெடுத்தால் அது கிரிக்கெட்டுக்கு நன்மையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்