தமிழகம் இந்தியாவிற்கே வழி காட்டுகிறது துறை வைகோ பேட்டி....

J.Durai

வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:02 IST)
ஒன்றிய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்திற்கான 1923 -24ஆம் ஆண்டிற்கான கல்வி நிதி ரூ. 2,249 கோடி பாக்கி வைத்துள்ள நிலையில், இவ்வாண்டு ஜூன் மாதத்திற்குள் தரவேண்டிய ரூ.500.00  கோடியை தராது காலம் தாழ்த்துவதால், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் 15,000 -ம் பேருக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதானை,தமிழக கல்வி அமைச்சர் அன்பு சகோதரர் மகேஷ் பொய்யாமொழி உடன் சென்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து மனு கொடுத்தோம்.
 மாணவர்களின் ஆசிரியர்களுக்கான இந்த நிதி குறித்து, மத்திய கல்வி அமைச்சரிடம் அக்கா கனிமொழி,விசிக அமைப்பின் தலைவர் திருமாவளவன் எடுத்து தெரிவித்தார்கள்.
 
ஒன்றிய கல்வி அமைச்சர் தெரிவித்த பதில் தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து தமிழகம் கையெழுத்து இட்டால் நிதியை உடனே அனுமதிக்கிறோம் என்று தெரிவித்தார்.
 
இது குறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்து இரண்டு திட்டங்களும் வேறுபாடுகள் உள்ளன. ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கையை, தமிழகத்தை போன்று வேறு 5-மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.
 
அண்மையில் பழனியில் நடந்த முத்தமிழ் முருகன் தமிழ் கடவுள் என்ற விழாவை நான் வரவேற்கிறேன். அது ஒரு கலாச்சார விழா. இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்
 
இது மதம் சார்ந்த விழா அல்ல. சகோதர மதங்களில். ரம்சான் நோம்பு, கிறிஸ்துமஸ் விழாவின் போது கேக் வெட்டுவது போன்று எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ள விழா போன்றது பழனியில் நடந்த முருகன் முத்தமிழ் விழா. ஒரு குறிப்பிட்ட இயக்கம்  இந்து மதத்தினை சொந்தம் கொண்டாடுவதை இந்த விழா உடைத்துள்ளது.
 
விஜய்யின் புதிய கட்சி தொடக்கத்தை வரவேற்கிறேன். நாங்கள் விஜயின் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வி வேண்டாம்.திமுக தலைமையில் ஏற்கனவே நாங்கள் உறுதியான கூட்டணியில் இருக்கிறோம் என துறை வைகோ எம்பி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்