“கோலி காரணமில்லாமல் அதை செய்யக் கூடியவர் இல்லை…” ஆதரவுக்கரம் நீட்டிய ஜெய் ஷா!

vinoth
வியாழன், 15 பிப்ரவரி 2024 (12:22 IST)
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இந்திய அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியை இன்று விளையாடி வருகிறது. 

டெஸ்ட் போட்டிகளில் இந்த அணியில் இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கோலி இண்ட தொடரில் இருந்து விலகியுள்ளார். முதலில் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய கோலி, அதன் பின்னர் முழுவதுமாக விலகியுள்ளார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போன் செய்து தான் முழு தொடரில் இருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கோலி மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில் “15 ஆண்டுகளில் கோலி முதல் முறையாக தனிப்பட்ட காரணங்களுக்காக விடுப்பு எடுத்துள்ளார். அது அவரின் உரிமை. தேவையில்லாமல் அவர் அப்படி செய்யக் கூடியவர் இல்லை. நாம் அவர் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு துணையாக நிற்கவேண்டும்.” எனப் பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்