அழுதுவிடாமல் பந்துவீச வேண்டும் என்பதுதான் என் ஆசையாக உள்ளது- ஓய்வு குறித்து ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

செவ்வாய், 9 ஜூலை 2024 (07:45 IST)
2002 ஆம் ஆண்டு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் தற்போது 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில் “என் ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பு. இந்த கோடையில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். வெஸ்ட் இண்டீஸோடு லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியே கடைசி போட்டி. என் நாட்டிற்காக 20 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சி. இது ஒரு கடினமான முடிவென்றாலும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் முடிவு. நான் என் நாட்டிற்காக சாதித்ததை போல மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  அவர்களுக்கு வழிவிட இது சரியான நேரம்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நாளை நடக்க உள்ள லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறார் ஆண்டர்சன். இது குறித்து பேசியுள்ள அவர் “இப்போதைக்கு என் கவனமெல்லாம், லார்ட்ஸ் டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசி, அணிக்கு வெற்றியைத் தேடி தரவேண்டும் என்பதுதான். பந்துவீசும் போது நான் அழுதுவிடாமல் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். கண்ணீரை அடக்கிக்கொண்டுதான் நான் பந்துவீச வேண்டும். எனது இப்போதைய உணர்ச்சிப்பூர்வமான நிலைமை போட்டி தொடங்கியதும் சரியாகும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்