ஓப்பனிங் பேட்ஸ்மேனும், கேப்டனுமான சுப்மன் கில் 2 ரன்களில் அவுட் ஆனாலும், அபிஷேக் சர்மா நின்று அதிரடி காட்டி வந்தார். அவர் 47 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை அடித்து விளாசி அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கடைசி நேர அதிரடியில் ஈடுபட இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 234 ரன்கள் சேர்த்தது.
இதன் பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் “ முதல் போட்டியில் எங்கள் போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இன்றைய நாள் எனக்கானது என உணர்ந்தேன். அதற்கேற்றபடி செயல்பட்டேன்.என் மேல் நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்துக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை பந்து சரியான இடத்தில் பிட்ச் ஆனால் அதை சிக்ஸருக்கு அடிக்க முயற்சி செய்வேன். அது முதல் பந்தாக இருந்தால் கூட.” என தன்னம்பிக்கையோடு பேசியுள்ளார். இந்த இன்னிங்ஸில் அவர் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.