இப்படியே பிட்ச்களை அமைத்தால் ரிட்டையர் ஆகிவிடுவேன்… ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கை!

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (10:53 IST)
சமீபகாலமாக டெஸ்ட் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது இங்கிலாந்து அணி. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அந்த அணிக்கு கேப்டனாகவும் , பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸும் மெக்கல்லமும் பதவியேற்ற பின்னர்தான். டெஸ்ட் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடிய மெக்கல்லம், இப்போது தன்னுடைய பாணியை ஒட்டுமொத்த இங்கிலாந்து அணிக்கும் செயல்படுத்தியுள்ளார். இதை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பாஸ்பால் கிரிக்கெட் என அழைக்கின்றனர்.

ஆனால் பர்மிங்ஹாம் விக்கெட்டில் இங்கிலாந்தின் பாஸ் பால் ஆட்டம் எடுபடாமல் போனதற்கு முக்கியக் காரணமாக மைதானம் அமைக்கப்பட்ட விதமும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட் அமைக்கப்பட்ட விதம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “ஸ்விங் மற்றும் வேகம் இல்லாத பிட்ச்களை வடிவமைத்தால் விக்கெட்களை வீழ்த்துவதே கடினமாகிவிடும். இந்நிலைமை நீடித்தால் நான் ஓய்வு முடிவை அறிவித்து விடுவேன்” என எச்சரிக்கும் விதமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார். நடந்து முடிந்த ஆஷஸ் முதல் போட்டியில் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்