இது தொடக்கம் தான்… முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதுபெற்ற ஜெய்ஸ்வால் கருத்து!

சனி, 15 ஜூலை 2023 (07:30 IST)
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை மூன்றே நாளில் முடித்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் 171 ரன்கள் சேர்த்ததன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற பின்னர் பேசிய அவர் “முன் தயாரிப்பு நன்றாக இருந்தது. நாங்கள் ஒரு நல்ல செஸ்ஸனை கொண்டிருந்தோம். ராகுல் டிராவிட்டிடம் நிறைய பேசினேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைத்து தேர்வாளர்களுக்கும், ரோஹித் பாய்க்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் இதற்காக உழைத்து வருகிறேன். நான் நன்றாகத் திட்டமிடுவதிலும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் உணர்ச்சிபூர்வமானது. இது ஒரு ஆரம்பம்தான், நான் எனது கவனத்தை செலுத்தி எனது கிரிக்கெட்டில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்

எனது பயணத்தில் நிறைய பேர் எனக்கு உதவினார்கள், அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மூத்த வீரர்களின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர்களிடம் இருந்து மேலும் கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்