ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுகிறாரா கோலி… திடீரென பரவும் தகவல்!

vinoth

திங்கள், 13 அக்டோபர் 2025 (09:24 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்றளவும் விவாதப் பொருளாக உள்ளது. தற்போது 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்துவிட்டதால் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஆனால் விரைவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவரை உள்ளூர் போட்டிகளில் விளையாட சொல்லி பிசிசிஐ அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கோலி ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் அடுத்த சீசனில் ஓய்வு பெறவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது சம்மந்தமாக அவர் தான் விளையாடி வந்த ஆர் சி பி அணி நிர்வாகத்திடம் முறையாகத் தெரிவித்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவலின் உண்மை தன்மை தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்