இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, சற்று முன் 80 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய தரப்பில் ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசினர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முகமது சிராஜ், பும்ரா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.