ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்திய தீவுகள்.. 2வது இன்னிங்ஸிலும் விக்கெட் இழப்பு.. தொடர்கிறது குல்தீப் வேட்டை..!

Siva

ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (14:01 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர்10ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
 
இதனை அடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்; ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பாலோ ஆன் ஆன நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. சற்று முன், 11 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்தியா சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில், முகமது சிராஜ் தனது விக்கெட் கணக்கை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டையை தொடருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்