கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து அவர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் பங்களாதேஷை குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இந்த போட்டியில் ஷமி ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். உலகிலேயே அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது பவுலர் ஷமிதான் என்பது கூடுதல் சிறப்பு.