இந்திய அணி கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆசியக் கோப்பையை வென்றதையடுத்து மூன்றே நாட்கள் இடைவெளியில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆனால் ஆசியக் கோப்பைத் தொடரில் இடம்பெற்ற ஒரு சில வீரர்களே இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
ஷுப்மன் கில் தலமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடி டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கவுள்ள தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
இந்திய அணி தற்போது ஒரே நேரத்தில் பல போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணியோடு ஒரு நாள் தொடரில் விளையாட, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.