இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து இங்கிலாந்து அணி முதல் நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 99 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவரோடு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களோடு களத்தில் உள்ளார்.