அதிரடி காட்டும் ஆஸ்திரேலியா; அடுத்தடுத்து டக் அவுட்! – ரசிகர்கள் அதிர்ச்சி

ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (18:51 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயா உலக கோப்பை போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இந்தியாவின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து ஆஸ்திரேலியா வீழ்த்தி வருகிறது.



டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியாவை இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக கட்டுப்படுத்தியது. அஸ்வின், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் வீழ்த்திய விக்கெட்டுகளால் ஆஸ்திரேலிய அணி 49வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களை ஈட்டியது.

200 ஐ இலக்காக கொண்டு களமிறங்கும் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டது,. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆஸ்திரேலியா அசுரத்தனமாக பந்து வீச்சை கையாள்கிறது. முதல் ஓவரிலேயே ஓப்பனிங் பேட்ஸ்மேன் இஷான் கிஷனின் விக்கெட் பறிபோனது.

இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மாவும், ஷ்ரேயாஸ் அய்யரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார்கள். இந்தியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் 3 பேர் அடுத்தடுத்து டக் அவுட் ஆனதால் இந்தியாவின் வெற்றி பாதையில் தள்ளாட்டம் ஏற்பட்டுள்ளது. எனினும் விராட் கோலி, ஜடேஜா, கே.எல்.ராகுல் போன்றவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்