உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 நாடுகளும் இந்தியா வந்து சேர்ந்துள்ளன. இதையடுத்து அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோத நியுசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.