பார்வையற்றோர் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3 முறையாக சாம்பியன்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (21:51 IST)
பெங்களூரில் நடந்த பார்வையற்றோர் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 3 முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று பார்வையற்றோர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நடந்தது.

ALSO READ: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஊதியம் உயர்வு- பிசிசிஐ
 
இதில், இந்தியாவும், வங்கதேச அணியும் மோதியது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில்,  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 0 ஓவர்களில் 277 ரன் கள் எடுத்தது.

எனவே, 278 ரன் கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன் கள் மட்டுமே எடுத்து 120 ரன் கள் வித்தியாசத்தில் தோற்றது.

கடந்த 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்ற இந்திய அணி இந்த ஆண்டும் கோப்பையைப் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்