விக்கெட் இழப்பில்லாமல் செல்லும் பங்களாதேஷ்… திருப்புமுனைக்காக காத்திருக்கும் இந்தியா!
சனி, 17 டிசம்பர் 2022 (10:46 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் குவித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் அபாரமாக விளையாடியது. முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 150 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் அடுத்தடுத்து செஞ்சுரி அடித்த நிலையில் சற்று முன் வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்து உள்ளது.
இதைத்தொடர்ந்து 513 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு விளையாடி வரும் பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை விக்கெட் இழக்காமல் 83 ரன்கள் சேர்த்துள்ளது.