இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அனியின் ரன்னை உயர்த்தினர். ஷிவம் துபே 54 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 53 ரன்களும் சேர்த்தனர்.
ஆனால் இதில்தான் தற்போது சர்ச்சைக் கிளம்பியுள்ளது. ஒரு வீரருக்குக் கன்கஷன் ஏற்பட்டு அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்கினால் அவரைப் போன்ற ஒரு வீரரைதான் களமிறக்கவேண்டும். ஒரு பேட்ஸ்மேனுக்கு கன்கஷன் என்றால் மற்றொரு பேட்ஸ்மேனைதான் இறக்கவேண்டும். ஆனால் ஆல்ரவுண்டரான துபேவுக்குப் பதில் வேகப்பந்து வீச்சாளரான ராணா இறக்கப்பட்டது தற்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.